திருப்பதியில் முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை திரளான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அந்த வகையில் 3ஆம் நாளான நேற்று முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார். அலங்கார முத்துப் பந்தலில் வீதியுலா வந்த சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கம் எழுப்பி தரிசனம் செய்தனர்.