நியூயார்க் நகரில் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி ANI செய்தியாளர் துணிச்சலாக கேள்வி எழுப்பிய சம்பவம் பேசு பொருளாகி இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை கூட்டம் நியூயார்க்-கில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இதன் 4ஆம் நாள் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள் என ANI செய்தியாளர் துணிச்சலாக ஒரு கேள்வியை எழுப்பினார்.
இதனையடுத்து திரும்பி நின்று பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டதாக குறிப்பிட்டார்.
ஆனால், இந்தியா தான் உங்களை தோற்கடித்ததாக, பாகிஸ்தான் பிரதமருக்கு ANI செய்தியாளர் பதிலளித்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.