சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இன்று திரு. சி. பி. ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் தினத்தந்தி குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.