நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் பாட்டில் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.திரையரங்கம் அருகே தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக அவரது வருகையை ஒட்டி, அங்கு மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், அப்பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது.
இதனை கண்ட போலீசார், ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.