இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்பிக்கப்பட்டது.
சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு திருக்குடைகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் திருக்குடை ஊர்வலம் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து இன்று திருமலையை அடைந்த திருக்குடைகளை டிரஸ்டின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால் ஜி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, நிர்வாக அதிகாரி அனில் குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.