கோவை மாவட்டம் காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரை, போலீசார் கைது செய்தனர்.
காளம்பாளையம் ஊராட்சியில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த வருவாய்த்துறையினர் தடை விதிப்பதாகவும், பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு வருவாய்த்துறையினர் இடையூறு ஏற்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதனையறிந்த போலீசார், அவர்களை தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.