சேலம் மாவட்டம் ஓமலூரில், பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் திமுகவினருக்கே வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில் பேரூராட்சிக்கு சொந்தமாக 40 கடைகள் உள்ளன.
இந்த கடைகள் அண்மையில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட நிலையில், அனைத்து கடைகளும் திமுகவினருக்கு வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் கடைகள் இன்றி வெயிலில் தற்காலிக கடை அமைத்து சிரமப்படுவதாக தெரிவித்த அவர்கள், குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.