கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
தண்ணீரின் வேகம் குறையாததால் பாதுகாப்புக் கருதி விதிக்கப்பட்டிருந்த தடையை 2வது நாளாக நீட்டித்து பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தது.
இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இருப்பினும் புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி குளிக்காமல் இருக்க, தொடர் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.