பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் நடந்த நெஞ்சை உலுக்கும் மரணங்கள் மிகவும் துயரமான சம்பவம் எனவும் ஈடு இழப்பு செய்ய முடியாதவை எனவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சகோதர, சகோதரிகள் பூரண நலத்துடன் திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2 நாட்களுக்கு பாஜக சார்பில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.