கரூரில் விஜய் பிரசார கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூரில் இருந்து வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.