பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.
கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ள அவர்,
விஜயின் கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாக தகவல் வருவதாகவும் கூறியுள்ளார்.இத்தனை கவனக்குறைவாக தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு மாவட்டத்தின் மொத்த போலீசாரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் அரசு எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.