கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் கரூர் கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயையும் பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்துள்ளார்.