கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த சங்கர்கணேசன் என்பவர் கரூரில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்த நிலையில், வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மாலை 5 மணி வரை பிரசார கூட்டத்தில் இருந்து வீடியோ காலில் பேசியதாகவும், பின்னர் கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் மனைவி மல்லிகா தெரிவித்துள்ளார். பின்னர், தனது கணவர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் வந்ததாகவும் கூறியுள்ளார்.