கரூரில் தவெக தலைவர் விஜயை பார்க்க சென்ற கூட்ட நெரிசலில் சிக்கிய ஒரே ஊரை 5 பேரும் இறந்ததால் கிராம முழுவதும் சோகத்தில் மூழ்கி உள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயை பார்க்க வேலுசாமிபுரத்திற்கு ஏமூரை சேர்ந்த தரணிகா, பிரியதர்ஷினி, அருக்காணி, சந்திரா மற்றும் 10 சிறுவன் ரித்திக் தனது தாய் சர்மிளாவுடன் 12 மணிக்கே சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் காத்திருந்து விஜய காண வேண்டும் என கூறி அங்கே நின்று பார்த்ததால் கூட்ட நெரிசலில் 6 ஆறு பேரும் சிக்கி கொண்டனர். அப்போது சிறுவன் ரித்திக் தாய் பிடியிலிருந்து விடுபட்டு கூட்ட நெரிசலில் சிக்கிய கீழே விழுந்தபோது ரசிகர்கள், தொண்டர்கள் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
சிறுவனின் தாய் சர்மிளா சிறு காயங்கள் உடன் உயிர் தப்பிய நிலையில் அவருடன் வந்த மற்ற 4 பேரும் கீழே விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் உயிரிழந்தவர்களின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.