சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டை, தமிழ் மாணவர் மன்றத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் நிலவியது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், நேற்றிரவு பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நீலங்கரையில் உள்ள அவரது வீட்டை, தமிழ் மாணவர் மன்றத்தினர் முற்றுகையிட முயன்றனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என கூறி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் ஒரு ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் விஜய் வீடு மற்றும் வீட்டிற்கு செல்லும் சாலையின் இருபுறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.