கரூர் சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று கடையடைப்பு நடைபெறுகிறது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்படுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.