தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சென்னை நீலாங்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, விஜயின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.