கரூரில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
பரப்புரையின் போது தவெக தொண்டர்கள் ஏறியதில் முறிந்து விழுந்த மரங்களை கணக்கெடுத்து, எவ்வளவு உயரத்தில் இருந்து தொண்டர்கள் கீழே விழுந்திருப்பார்கள் என டேப் மூலம் அளவிட்டனர். மேலும் எத்தனை மரங்கள் முறிந்துள்ளது, அவை எத்தனை பழமையானவை என்பதையும் ஆய்வு செய்தனர்.
இதனிடையே விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பந்தலை பிரித்து தவெகவினர் மேலேறிய கடையின் உயரம், அங்கு கிடந்த காலணிகள் உள்ளிட்ட தடயங்களை அதிகாரிகள் சேகரித்துச் சென்றனர்.