கரூரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சந்தியடைய வேண்டி கும்பகோணம் மகா மக குளக்கரையில் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது,
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி கும்பகோணம் மகா மக குளக்கரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் மக்கள் ஒன்றிணைந்து விளக்கேற்றி வழிபட்டனர்.