கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது.
கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 110 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கோவையில் இருந்து 114 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை நடைபெறுகிறது.ங
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.