கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த 19 வயதுடையோருக்கான தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர்.
பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள திசா பள்ளியில் கடந்த 26ஆம் தேதி தேசிய அளவிலான இறகுப் பந்து போட்டி தொடங்கியது. இதில் தமிழகம், மேற்குவங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட நிலையில், கடந்த 2 நாட்களாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இந்நிலையில், 14 வயதுக்குட்பட்ட இறுதிப்போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். 17 வயதுக்குடோருக்கான பிரிவுகளில் மகாராஷ்டிரா, தமிழகம், உத்தராகண்ட் மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்தனர். 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.