கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலஜோகிப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.