அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள தேவலாயத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தின் கிராண்ட் பிளாங்க் பகுதியில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
மேலும், தேவலாயத்திற்கும் தீவைத்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது கிறிஸ்துவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், நமது நாட்டில் இந்த வன்முறை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.