கர்நாடகாவில் நகைக்கடை ஊழியரைக் கடத்தி, சுமார் ஒன்றரை கோடி நகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்களூரில் முஸ்தபா என்பவர் நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். இவர் தங்கத்தை உருக்குவதற்காக அருகில் உள்ள பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ஒன்றரை கோடி மதிப்பிலான நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவரை காரில் சிலர் பின் தொடர்ந்து வந்தனர். நகைகளை உருக்கும் இடம் வந்ததும், அவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது காரில் வந்த நபர்கள் மின்னல் வேகத்தில் முஸ்தபா-வை கடத்தி, இருசக்கர வாகனத்தில் இருந்த நகைகளை எடுத்துச் சென்றனர்.
இதுதொடர்பான காட்சியைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.