தொடரும் கனமழையால் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது.
குறிப்பாக, ஹிமாயத் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் முசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், ஐதராபாத்தின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஆந்திர மாநிலம் விஜயவாடா, அன்னமைய்யா என பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பலரது வீடுகளில் மழை நீர் புகுந்தது.
பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாகக் கிருஷ்ணா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.