உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாகப் பாகிஸ்தான் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா, பயங்கரவாதத்தின் சவாலை எதிர்கொண்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக அண்டை நாடான பாகிஸ்தான் திகழ்வதாகவும் அவர் விமர்சித்தார். பல காலமாக, முக்கிய சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானில் இருந்து தான் வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைதியை மீட்டெடுக்க உதவும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.