கிருஷ்ணகிரியில் கல்லூரி பேருந்து மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மாணவ, மாணவிகள் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
அவர்களைத் திரும்ப அவர்களது வீடுகளில் இறக்கி விட்டுவிட்டு, பேருந்துக் கல்லூரியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, அதிவேகத்தில் வந்த கார், கல்லூரி பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களைக் காவல் நிலையம் எடுத்துச் செல்லும் வழியில், கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.