கரூரை தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உட்பட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல்லில் விஜய் பிரசாரத்தின்போது போலீசாரின் நிபந்தனைகளை மீறியதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு செய்தல், பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் தவெக கட்சி நிர்வாகிகள்மீது நாமக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.