நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த மகேஷ்- அனிதா தம்பதி திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றனர்.
உடனடியாகப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் எவ்வித முன்னறிவிப்பின்றி காலி செய்யக் கூறியதாகவும் ஊருக்குச் சென்று திரும்பி வருவதற்குள் உரிமையாளர் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே விசிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.