பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரையில் பாஜக மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கானோர் கலந்துகொண்டு யாத்திரையாகச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையின் பத்துகாணி மலையில் அமைந்துள்ள காளி கோயிலில் சமுத்ரகிரி ரத யாத்திரை விழா 3 நாட்களுக்கு முன்பு விமரிசையாகத் தொடங்கியது.
சமுத்ரகிரி ரத யாத்திரையை முன்னிட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீர் நிறைத்தல், இருமுடிக்கட்டு, சந்தனக்குடம் நிறைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடிக் கட்டியும், குங்குமம் மற்றும் பால், சந்தன குடங்களை கைகளில் சுமந்து யாத்திரையாகக் காளி கோயிலுக்குப் புறப்பட்டனர்.
கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய ரத யாத்திரை வரும் 29ஆம் தேதி காளிமலை சென்றடையவுள்ள நிலையில், 3வது நாள் யாத்திரை ஆற்றூர் பகுதியை வந்தடைந்தது.
அப்போது, ரதயாத்திரைக்கு பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தினர். இந்த யாத்திரையில், பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.