கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தபோது கள்ளச்சிக்குறிச்சிக்கு செல்லாத முதலமைச்சர் ஸ்டாலின், கரூருக்கு மட்டும் தனிவிமானத்தில் சென்றுள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார் எனவும், அவருக்கு ஆஸ்கர் விருதே வழங்கலாம் எனவும் விமர்சித்தார்.
கரூர் துயர சம்பவத்தை வைத்துச் சிலர் அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் எனத் தெரிவித்தார்.