சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலையைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊடுருவி இருக்கும் நக்சல்களின் ஆதிக்கத்தை வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நக்சல்களைச் சரணடைய வைக்கும் திட்டங்களும், தீவிர தேடுதல் வேட்டைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள கொய்மென்டா கிராமத்தின் அடர்ந்த வனப்பகுதியில், நக்சல்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருவதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சுக்மா மாவட்ட காவல் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் சிறப்புப் பிரிவான ‘கோப்ரா’ படையின் 203வது பட்டாலியன் வீரர்கள் தொழிற்சாலை’ போல இயங்கி வந்த ஆயுத ஆலையைக் கண்டுபிடித்து அழித்தனர்.