ஹரியானாவில் ராணுவ வீரர்கள் இணைந்து ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக ஹரியானா மாநிலம் அம்பாலாவில் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
அப்போது போா்களில் இலக்கைத் தாக்கி அழிப்பதற்கும், தந்திரமாகச் செயல்பட்டு எதிரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரோன்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் ஒரே நேரத்தில் பல ட்ரோன்களை வானில் பறக்க விட்டுப் பயிற்சி மேற்கொண்டனர்.
இந்தப் பயிற்சியின் மூலம் புதிய போா் உத்திகளையும், வருங்கால போா்களுக்கான தொழில்நுட்ப நடைமுறைகளையும் மேம்படுத்தப் பெரும் உதவியாக இருந்ததாக ராணுவ வீரர்கள் கூறுகின்றனர்.