இந்திய ராணுவம் வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்குவதற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை வெளியிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு, எல்லைப் பகுதியில் வான் பாதுகாப்பு கருவிகளை அதிகப்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.
இதனால் 3 படைப் பிரிவுகளுக்குத் தேவையான வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் தயாரித்து கொடுக்க ராணுவம் ரூ.30,000 கோடி மதிப்பில் டெண்டர் விடுத்துள்ளது.
ஒவ்வொரு படைப்பிரிவிலும் 9 வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.