கரூர் துயர சம்பவம் போல இனி நாட்டில் எங்கும் நிகழக் கூடாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
கரூர் துயர சம்பவம் போல இனி நாட்டில் எங்கும் நிகழக் கூடாது என்றும் பாதிக்கப்பட்டவர்களை காண பிரதமர் நேரடியாகக் கரூர் வர விரும்பினார் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
பிரதமர் அறிவித்த நிவாரணம் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு வந்து சேரும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவே வந்தோம், யாரையும் விமர்சிக்கவோ, ஆய்வு செய்யவோ வரவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
கரூர் துயர சம்பவம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில் கூற முடியாது என்றும் நீர், உணவு இல்லாமல் தவித்ததாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர் என்றும் நெரிசலில் சிக்கியதால் வெளியேற முடியாமல் தவித்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.