சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சரக்கு லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நூற்பாலை பொருட்களை ஏற்றிக் கொண்டு காங்கேயத்திலிருந்து எடப்பாடி நோக்கிச் சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது.
வீரப்பம்பாளையம் அருகே பயணித்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.