தஞ்சை அருகே இடுக்காட்டுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து, சடலத்தை நடுசாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இடுகாடு உள்ளது. இங்கு, அகரமாங்குடி மாதா கோவில் தெருவைச் சேர்ந்த மக்கள் சடலங்களை அடக்கம் செய்து வந்தனர்.
இந்நிலையில், சில நாடுகளுக்கு முன்பு இடுகாட்டிற்கு செல்லும் பாதையை நெடுஞ்சாலை அதிகாரிகள் அடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.