தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, டெல்லியில் தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா தலைமையிலானோர் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி போட்டியிடுகின்றன. இது தொடர்பாகத் தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா, இணை பொறுப்பாளர் ஸ்ரீமுரளிதர் மொஹோல், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
அப்போது தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த வியூகங்களை வகுப்பது, தேர்தல் பரப்புரைக்கு முக்கிய தலைவர்களை களமிறக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.