ஆசிய கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம், ரன்னருக்கான பரிசாக வழங்கப்பட்ட காசோலையை ஆத்திரத்துடன் கீழே வீசிச் சென்றார்.
இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட பிறகு, கேப்டன் சல்மான் அலி அகா பரிசுத்தொகையை பெறுவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டார்.
அப்போது பாகிஸ்தான் அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்கள் சேர்ந்து, சுமார் 66 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
ஆனால், தோல்வியைத் தாங்க முடியாமல் கோபத்தில் இருந்த சல்மான் அந்தக் காசோலை மாதிரியைத் தூக்கி வீசினார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.