நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை தோட்ட கேண்டினுக்குள் புகுந்த சிறுத்தையை கண்டு அங்கிருந்தவர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வளர்ப்பு நாய் மற்றும் பூனைகளை வேட்டையாடிச் செல்வது வாடிக்கையாகியுள்ளது.
இந்த நிலையில், கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை தோட்ட கேண்டினுக்குள் பூனையை விரட்டியவாறு சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது.
அப்போது கேண்டினுக்குள் அமர்ந்திருந்த ஒருவர், சிறுத்தையைக் கண்டவுடன் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தார்.
இதன் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிகள் விட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.