தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் போலீசார் கைது செய்தனர்.
புதூர், கயத்தார், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024 ஆம் ஆண்டில் பெய்த மழையில் மிளகாய், கொத்தமல்லி, சூரியகாந்தி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.
இதற்கான காப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.