அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்டுவதை எதிர்த்துக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
அந்த ரேஷன் கடை பொதுப் பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்படுவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகும் எனக் கூறி கட்டட பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோஷமிட்டனர்.
மேலும், மீண்டும் பழைய இடத்திலேயே புதிய ரேஷன் கடை கட்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















