திருவண்ணாமலை அருகே ஆந்திராவை சேர்ந்த பெண்ணை 2 காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் பழங்களை ஏற்றிக்கொண்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுள்ளனர்.
ஏந்தல் புறவழிச்சாலையில் சென்றபோது, வாகன தணிக்கையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோர், சரக்கு வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.
பின்னர், வாகனத்தில் இருந்த 2 பெண்களையும் அருகே இருந்த தோப்புக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, சகோதரி கண்முன்னே இளம்பெண்ணை காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 2 காவலர்களையும் போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.