இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மகளிர் அணி கேட்படனாக உயர்ந்த லிசா கார்ப்ரினி, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்… பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஸ்ரீவஸ்டவா என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்படுகிறது. அதிகாலை நேரம் இருக்கும். அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. பதறிபோன குழந்தைகள் காப்பக பணியாளர் ஒருவர், அருகில் சென்று பார்த்தபோது பதறிவிட்டார். 3 மாத குழந்தை குளிர் தாங்க முடியாமல் பசியில் அழுது கொண்டிருந்தது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு காப்பகத்திற்கு சென்ற அவர், லைலா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.
பச்சிளம் குழந்தையின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துவிட்டதே என்ற எண்ணம் தோன்றலாம்…. ஆனால் லைலாவோ யோகக்காரி…. காப்பகத்திலேயே வாழ்க்கை முடிந்துவிட வேண்டும் என்பது அவளது விதியில் இல்லை… அமெரிக்காவை சேர்ந்த (ஹரன் – சூ) தம்பதி இந்தியா பயணம் மேற்கொண்டபோது, ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். ஸ்ரீவஸ்டவா குழந்தைகள் காப்பகத்திற்கு வருகை தந்த அவர்களுக்கு, லைலா ஏதோ ஒரு வசீகரத்தை ஏற்படுத்தினாள்.
ஆண்குழந்தையை தத்தெக்க வேண்டும் என முடிவு செய்த அமெரிக்க தம்பதிக்கு, லைலாவை பிடித்துப் போக அவளையே தங்கள் மகளாக ஏற்றுக்கொண்டனர். அமெரிக்காவுக்கு குழந்தையை அழைத்துச் சென்ற தம்பதி, லிசா எனப் பெயர் மாற்றி வளர்த்து வந்தனர். பின்னர் ஹரன் – சூ – லிசா ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு இடம்பெயர்ந்தனர். லிசாவின் வாழ்க்கை மாறியது இங்குதான்.
பூங்கா ஒன்றுக்கு லிசாவை அழைத்துச்சென்ற தந்தை ஹரன், அவளுக்குக் கிரிக்கெட்டில் ஆர்வம் இருப்பதை அறிந்து கொண்டார். சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய லிசா, அவர்களுக்கு இணையாகத் திறனை வெளிப்படுத்தினார். இதனையடுத்து முறையாகக் கிரிக்கெட் நுணுக்கக்கள் கற்றுக்கொண்ட லிசாவுக்கு, 1997-ம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட லிசா அடுத்தடுத்து சிறப்பாக விளையாடி, நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் கலக்கிய லிசா சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார். சவாலான நேரத்தில் பேட்டிங், பவுலிங்கில் கைகொடுக்க அணியில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்தார். 2013-ம் ஆண்டில் மகளிர் உலகக்கோப்பை தொடரில் அணியை வழிநடத்திய லிசா, கோப்பையும் வென்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
ஆனால், அடுத்த நாளே ஓய்வையையும் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கிரிக்கெட் விளையாட்டி லெஜண்டரி வீராங்கணையாக இருந்த லிசா கார்ப்ரினி, இன்று வரையிலும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து தனது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளார்.
















