எம்.பி-க்கள் குழுவை சந்தித்து விளக்கமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டும் கரூர் மாவட்ட அதிகாரிகள் தங்களை சந்திக்க மறுத்ததாகவும், அவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம் என்றும்பல வழிகளில் அழைப்பு விடுத்தும் மாவட்ட அதிகாரிகள் எங்களை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாநில மட்டும் மாவட்ட அதிகாரிகளிடம் 5 கேள்விகளை முன்வைக்கிறோம் என தெரிவித்த அவர், அதிக மக்கள் கூடும் இடமான லைட் ஹவுஸ் பகுதியில் அனுமதி கேட்டும் வழங்கப்படாதது ஏன்? என வினவினார்.
மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன்? என்றும், விஜய் மீது வீசப்பட்ட காலணிகளுக்கு பொறுப்பேற்பது யார்? எனவும் கேள்வி எழுப்பினார்.
ஆயுதங்களுடன் வந்த வெளியாட்கள் மக்களை தாக்கி காயப்படுத்தியுள்ளது மிக மோசமான செயல் என்றும், எதிர்பார்த்த அளவைவிட அதிக மக்கள் வந்தபோது போதுமான போலீசார் அனுப்பப்படாதது ஏன்? என்றும் வினவினார்.
பாதிக்கப்பட்ட மக்களை அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்காதது ஏன்? என்றும், அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். ஒருநபர் ஆணைய முடிவு பெரும்பாலும் அரசுக்கு ஆதரவாகவே இருக்கும் என்றும் தேஜஸ்வி குறிப்பிட்டார்.