திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழாவையொட்டி, பராசக்தி அம்மன் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விழாவின் 9-ம் நாளான நேற்று பராசக்தி அம்மன் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அம்பாளுக்கு சரவிளக்கு தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.