கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவை இடையர்பாளையம் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பல ஆண்டுகளாக தங்கி, பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் நவராத்திரி விழாவை கொண்டாடினர். பிரம்மபுத்திரா ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணை கொண்டு செய்யப்பட்ட துர்கை அம்மன் சிலையை அவர்கள் வழிபட்டனர்.