பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வந்தபோது, தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை மறைமுகமாக அமல்படுத்த பாஜக அரசு, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஆதார் கார்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் மூலம் முசாபர்பூர் மாவட்டத்தில் முன்பிருந்ததை விட 88,108 வாக்காளர்ளும், பாட்னா மாவட்டத்தில் முன்பிருந்ததை விட 1,63,600 வாக்காளர்களும், நவடா மாவட்டத்தில் 30,491 வாக்காளர்களும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பீகார் சென்று தேர்தலுக்கான பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்த பின்னர் அம்மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.