ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரரான அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அல்காரஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.