ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதில் பக்தர்கள் ஏராளமானோர் விரதமிருந்து தீ மிதித்துத் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அப்போது பெண் பக்தர் ஒருவர், பூக்குழியில் இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழ முயன்றார். உடனடியாக அருகில் இருந்த பக்தர்கள் அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர்.